ETV Bharat / international

டிரக்கில் இருந்த 39 சடலங்கள் - அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

லண்டனில் 39 சடலங்களை ஏற்றி வந்த டிரக்கை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

driver
author img

By

Published : Oct 24, 2019, 4:33 AM IST

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆம்புலன்ஸாரிடமிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் எஸ்ஸெக்ஸ் பகுதியிலுள்ள தொழிற்பேட்டையில் டிர்க் ஒன்றில் 39 சடலங்கள் உள்ளதாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், டிரக்கை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுச் சென்று சடலங்களை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக வட அயர்லாந்தைச் சேர்ந்த டிரக் ஒட்டுநர் மோ ராபின்சன்(25) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், வட அயர்லாந்திலிருந்து கடந்த 19ஆம் தேதி ஹோலிஹெட் (Hollyhead) வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் டிரக்கிலிருக்கும் சடலங்களை அடையாளம் காணும் பணி முழு மூச்சில் நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்,

டிரக்கில் இருந்த 39 சடலங்கள் - அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை

அந்த டிரக் குளிர்சாதன வசதியைக்கொண்டது என்றும் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய நடைபெற்ற முயற்சியில் இவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கிங் மேக்கராக உருவெடுத்த இந்திய - கனடா அரசியல்வாதி

Intro:Body:

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - முதல்வர் பழனிசாமி * தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி நன்றி | #MedicalColleges #EPS #PMModi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.