இங்கிலாந்து நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று திடீரென்று பெய்த கனமழைக்கு பிறகு சிறிது நேரத்தில் இரட்டை வானவில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வீட்டிலேயே முடங்கியிருக்கும் மக்கள் வானவில்லை புகைப்படங்கள் எடுத்தனர்.
வாரந்தோறும் களப்பணியாளர்களை கெளரவிக்கும் வகையில் மக்கள் கைகளை தட்டுவது வழக்கம். அதேபோல், இந்த வாரத்திற்கான கை தட்டலுக்கு முன்னர் வானில் தோன்றிய வானவில் சுகாதார ஊழியர்களின் ஆதரவுக்காகவும், ஒற்றுமையின் சின்னமாகவும் திகழ்வதாக மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிதி உதவி செய்யுங்கள்... சாலையில் ஒன்று திரண்ட சூப்பர் ஹீரோஸ்!