ETV Bharat / international

பிரெக்ஸிட் குளறுபடி: பொதுத்தேர்தலை நோக்கி பிரிட்டன்?

லண்டன்: பிரெக்ஸிட் விவகாரத்தால் பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

author img

By

Published : Sep 3, 2019, 10:01 AM IST

Updated : Sep 3, 2019, 11:42 AM IST

BRITIAN

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரிட்டன் வெளியேறுகிறது. இதனை பிரெக்ஸிட் (Britian + Exit = Brexit ) என்று அழைக்கிறார்கள்.

இந்த பிரெக்ஸிட்டை சுமூகமானதாக்க பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரெசா மே ஐரோப்பியா ஒன்றியத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'பிரெக்ஸிட் விரைவு ஒப்பந்தம்' போட்டுக்கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் குறையிருப்பதாகக் கூறும் பிரிட்டன் எம்.பி.க்கள் மூன்று முறை அதனை நிராகாரித்துவிட்டனர். எம்.பி.க்களின் ஆதரவை பெறமுடியாத காரணத்தால், கடந்த ஜூன் மாதம் தெரெசா மே தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய பிரதமரையும் விடாது துரத்தும் பிரெக்ஸிட்

இதையடுத்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி போரிஸ் ஜான்சனை பிரதமராக தேர்ந்தெடுத்தது. ஆனால், பிரெக்ஸிட் விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை (No Deal Brexit) நோக்கி பிரிட்டனை நகர்த்திச் செல்வதாக கடும் விமர்சனங்கள் வலுத்துவந்தன.

(ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து)

போரிஸ் ஜான்சனின் முடிவால் கொந்தளித்த ஆளும்கட்சி எம்.பி.க்கள்

இந்நிலையில், பிரெக்ஸிட் என்னும் பிரிட்டன் வெளியேற்றம் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால் கால விரயத்தைக் குறைக்கப் பிரிட்டன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒரு மாதம் காலம் முடக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக அறிவித்தார்.

இது பிரிட்டன் எம்.பி.க்களிடையே ( கன்சர்வேட்டிவ் கட்சி உள்பட) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை தடுக்கும் எம்.பி.க்களின் முயற்சியைத் தடுப்பதே போரிஸ் ஜான்சன் நோக்கம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரதமர் போரிஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

அக்டோபரில் பொதுத்தேர்தல்?

இதனிடையே, கன்சர்வேட்டில் கட்சியைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக களமிறங்கியுள்ளாதக் கூறப்படுகிறது. இதனால், அக்டோபர் மாதம் பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று டென் டவுனிங் ஸ்டிரீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், "ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான வாய்ப்பு கடந்து சில வாரங்களில் அதிகரித்துள்ளது.

காரணமில்லாத கால விரயத்தை ஏற்படுத்தும் ஜெரிமி கார்பினின் (எதிர்க்கட்சித் தலைவர்) திட்டத்துக்கு எதிராக எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். பிரெக்ஸிட்டை தடுக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

அக்டோபர் 31ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறும். எந்த சாக்குப்போக்குக்கு இடமில்லை. அக்டோபரில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு உச்சிமாநாட்டில் ஒப்பந்தத்தை பெறுவேன் நன நம்புகிறேன்" என்றார்.

இதன் மூலம், பிரதமர் போரிஸ் ஜான்சன் மறைமுகமாக பொதுத்தேர்தலை வரவேற்கிறார் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Last Updated : Sep 3, 2019, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.