ETV Bharat / international

கரோனாவால் டென்மார்கில் முதல் உயிரிழப்பு - மூடப்படும் எல்லைகள்! - டென்மார்க் கொரோனா நடவடிக்கை

கோபன்ஹேகன்: கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக டென்மார்க் நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Denmark announces first coronavirus death,

author img

By

Published : Mar 15, 2020, 4:52 PM IST

சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் தோன்றிய கோவிட் 19 வைரஸ் (கரோனா) தற்போது இத்தாலி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் மிக வேகமாக பரவிவருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதகரித்துவருகிறது.

இந்நிலையில், கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக, டென்மார்க்கில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டென்மார்க் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 81 வயது மதிக்கதக்க நபர் உயிரிழந்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளில், ஏற்கனவே நான்கு பேர் கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, டென்மார்கின் எல்லைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய காரணங்களின்றி, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு டென்மார்கில் அனுமதியளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டென்மார்க் நாட்டிலுள்ள நூலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.