உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை முன்னேற்றும் வகையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) நாடுகளின் தேவைகள் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை உருவாக்கிவருகிறது.
இதன் மூலம் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கான சூழலை விரிவுபடுத்துவதற்கான புதிய பயனர் வழிகாட்டியைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு அனைவரையும் சென்றடையும்.
குறைந்தது இரண்டு பில்லியன் மக்கள் அடுத்த பத்து ஆண்டுக்குள் அத்தியாவசிய சுகாதார சேவைகளை பெறுவார்கள். புதுமையான புதிய மருந்துகள் பெருகிய நிலையில், உலகம் முழுவதும் காப்புரிமை பெறப்பட்டு பரவலாக அதிக விலையில் கிடைக்கிறது. ஆகவே அத்தியாவசிய சிகிச்சை கிடைக்க சில அறிவுசார் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
சவாலை எதிர்கொண்ட தென் கொரியா
தென்கொரிய தலைநகர் சியோலில் முதல் 30 நோயாளிகளை சீரான மற்றும் விடாமுயற்சியுடன் அந்நாடு கையாண்டது. ஆனால், 31ஆவது கோவிட்-19 நோயாளி அடையாளம் காணப்பட்டபோது, அவர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது.
ஆம் அங்கு நிலைமை அப்படியே தலைகீழானது. உலக பொருளாதார கோவிட் பணிக்குழு கூட்டத்தில் உரையாற்றிய தென் கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கியுங்-வாஇ "அதன் பிறகு, பரவுவதைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டதாக தெரிவித்தார்.
ஏனெனில் சூப்பர்-ஸ்ப்ரெடர் என்றும் அழைக்கப்படும் 31ஆவது நோயாளி, நோயறிதலுக்கு முன்னர் நாட்டின் பல கூட்டமான பகுதிகளுக்கு பயணித்தது தெரியவந்தது. இவரால் ஏராளமான மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.
அதன் பின்னர் தென் கொரியாவில் அனைவருக்கும் சோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டனர். சில நோயாளிகளுக்கு, அவை வெளியிடப்படுவதற்கு முன்பே பல முறை சோதனைகள் நடத்தப்பட்டன.
அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, தென் கொரியா போன்று லாக்டவுன் (ஊரடங்கு) செய்யவில்லை. ஆயினும், பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. அங்கு துரிதமாக அறிவுசார் பணிகள் தொடர்ந்தது.
காய்ச்சல்
கோவிட்-19 காய்ச்சலுக்கும் பருவக் கால காய்ச்சலுக்கும் வேறுபாடு உள்ளது. எனினும் கோவிட்-19, சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச நோய்கள் வழியாகவும் பரவும்.
இது மட்டுமின்றி ஒருவர் கோவிட்-19 காய்ச்சல், சாதாரண காய்ச்சலுடன் சில ஒத்த அறிகுறிகளை கொண்டிருந்தாலும், அதிக வித்தியாசத்தை உள்ளடக்கியது. ஆனால் கோவிட்-19 ஒரு கடுமையான நோய். இது மரணத்திற்கும் வழிவகுக்கும்.
கவலை
கோவிட்-19 வைரஸ் பரவலால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான உயிரிழப்பை சந்தித்துவருகின்றன. இத்தாலியிலும் முழு அடைப்பு தொடர்கிறது. தற்போதும் புதிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்தியாவிலும் சூப்பர் ஸ்ப்ரெடர் என்னும் நோய் பரப்புவர்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பல வகைகளில் கரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு கவலைக்கொள்கிறது.