கரோனா வைரஸால் இத்தாலி பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதுவரை இத்தாலியில் கரோனா வைரஸால் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதில், 33 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
மார்ச் 11ஆம் தேதி முதல் இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் கடைகள், மியூசியம்கள், காபி ஷாப்கள், உணவகங்கள், மால்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் ஒரே நேரத்தில் பயணம் செய்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மீண்டும் கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரோம் நகரில் ஸ்கூட்டர் பகிர்வு திட்டத்தை மேயர் விர்ஜினியா ராகி அறிமுகப்படுத்தியுள்ளார். ரோம் நரிவாகத்துடன் ஹெல்பிஸ் கம்பெனியுடன் 1000 எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் ரோம் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வெளியே சென்று வருவதற்கு ஸ்கூட்டர்கள் பயன்படுத்தினால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முடியும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருந்துகள் கொண்டு செல்லப் பயன்படும் ட்ரோன்கள்...!