பிரிட்டனுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தேர்தலுக்கு ஆதரவாக 438 பேரும் எதிராக 20 பேரும் வாக்களித்தனர். பிரிட்டன் எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததே இந்த பெரும் வாக்கு வித்தியாசத்துக்குக் காரணம்.
இதுகுறித்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், "இந்நாட்டின் குடியரசின் மதிப்பையும் நம்பிக்கையையும் காப்பாற்ற ஒரே வழி, மக்கள் மூலம் இந்த நாடாளுமன்றம் ஆளப்படுவதுதான்" என்று கூறினார். இது மாற்றத்துக்கான நேரம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் தெரிவித்தார்.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற அக்டோபர் 31 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், போரிஸ் ஜான்சன் முன்மொழிந்த பிரெக்ஸ்ட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததால் காலக்கெடு ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட்டது.
தேர்தல் நடைபெறவுள்ளதால் அடுத்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 1923ஆம் ஆண்டுக்குப் பின் டிசம்பர் மாதத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது இதுவே முதன்முறை.
இதையும் படிங்க: ட்ரம்ப்புக்கு காலம் சொல்லப்போகும் பதிலென்ன!