அண்மையில் நடைபெற்ற தேர்தலில், பிரிட்டனில் போரிஸ் ஜான்சன் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதனை இங்கிலாந்து ராணி எலிசபெத் முறைபடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பான 'பிரெக்ஸிட்' மசோதாவை சில திருத்தங்களுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்தார். 'ஹவுஸ் ஆப் காமன்ஸ்' எனப்படும் கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை ஆதரித்து 358 வாக்குகளும் எதிராக 234 வாக்குகளும் கிடைத்தது.
பிரெக்ஸிட் என்றால் என்ன? #brexit
பின்னர், மசோதா அதிக வாக்குகள் பெற்றதால் பிரெக்ஸிட் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா 2020ஆம் ஆண்டு ஜனவரியில், மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து, 2020 ஜனவரி 31ஆம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து முறைப்படி வெளியேறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரெக்ஸிட்டை இனி யாராலும் தடுக்க முடியாது - பிரிட்டன் பிரதமர் சூளுரை