இதுகுறித்து மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா காலத்தில் மக்கள் வங்கியில் இருந்து பணம் எடுப்பது, பரிமாற்றம் செய்வது ஆகியவற்றுக்கு அவர்கள் வங்கியின் ஆன்லைன் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனால் ஆன்லைனில் சைபர் மோசடி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
தனிநபர் ஒருவர் தனது செல்போன் மூலமாகவோ அல்லது வை-பை மூலமாகவோ ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்யும்போது சைபர் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு அவர்களின் பணத்தை எடுப்பது மிகவும் எளிதாக அமையும்.
அப்படி நடக்கும் பட்சத்தில் அல்லது முன்கூட்டியே வங்கி தரப்பில் இருந்து அவர்கள் முதலில் தங்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களில் யாரேனும் பண மோசடிக்கு உள்ளானால் உடனடியா அவர்களின் பணத்தை மீட்டு கொடுப்பதில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முடிந்தவரை ஆன்லைன பண பரிமாற்றத்தில் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வைப்பது வங்கியின் கடமையாகும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு!