ஐரோப்பிய ஒன்றிய நாடான ஆஸ்திரியாவின் இந்தியத் தூதரக பணியாற்றியவந்தவர் ரேணு பால். இவர் தனது சொந்தத் தேவைகளுக்காக அரசின் பணத்தை தவறாகப் பயன்படுக்கிறார் எனப் புகார் எழுந்தது.
இது குறித்து மத்திய புலானய்வு ஆணையம் அளித்த தகவலின்பேரில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், தூதர் ரேணு பால் கோடிக்கணக்கான அரசின் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவழித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்தது தெரியவந்தது என வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு ஆணையத்திடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், ரேணு பாலை தலைநகர் டெல்லிக்குப் பணியிடமாற்றம் செய்து டிசம்பர் 9ஆம் தேதி உத்தரவிட்டது. இதன்பேரில், இன்று டெல்லி திரும்பும் ரேணுகா பாலிடம் வெளியுறவுத் துறை அமைச்சகம் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
1988ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டுப் பணியில் சேர்ந்த ரேணு, ஆஸ்திரியா தூதராவதற்கு முன்பாக அமெரிக்கா, ஃபிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் தூதராகப் பணியாற்றியுள்ளார். ஆசியன் அமைப்பின் கூடுதல் செயலாளராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
இதுதவிர, வின்னாவில் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச அமைப்பின் நிரந்தர இந்தியத் தூதராகவும் சர்வதேச அணுசக்தி முகமையத்தில் இந்தியப் பிரிதிநிதியாகவும் தற்போது பொறுப்பு வகித்துவருகிறார்
ரேணு பாலின் பணிக்காலம் அடுத்த மாத்தோடு நிறைவடைந்தவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையம் படிங்க : ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு - விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!