பாலைவன வெட்டுக்கிளிகள், கரோனாவுக்கு அடுத்து இன்று அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். தொடக்கத்தில் வண்டுகள் போல வளரும் இவை, இறக்கைகள் முளைத்தவுடன் கூட்டம் கூட்டமாகப் பறக்கத் தொடங்கிவிடும்.
வெட்டுக்கிளி வகைகளிலேயே மோசமானது, இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள்தான். ஒரு பெரிய பாலைவன வெட்டுக்கிளி அதன் எடைக்கேற்ப உணவைத் தின்று தீர்த்துவிடும்.
லோகஸ்ட் என்றழைக்கப்படும் இந்த வெட்டுக்கிளிகள் தனியாக இருந்தால் பிரச்னை இல்லை. கூட்டமாகச் சேர்ந்தால் சிக்கல்தான். நம்மூரில் உற்பத்தியாகும் ஈசல்களைப் போல இந்த வெட்டுக்கிளிகள் பெருகிவிடும்.
பாலைவன வெட்டுக்கிளிகள் அதிக தூரத்துக்கு புலம்பெயர்ந்து செல்லும் ஆற்றல் கொண்டவை. ஒரு நாளில் 150 கி.மீ. தூரம் வரை பறக்கும்.
ஆப்பிரிக்க காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த வெட்டுக்கிளிகள், கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தியுள்ளவை. வரும் வழியெல்லாம் இனப்பெருக்கம் செய்து, அந்தப் பகுதிகளில் உள்ள பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்பவை.
இந்த வெட்டுக்கிளிகளால் அர்ஜென்டினா நாடே கலங்கிப்போய் உள்ளது. சோளத் தோட்டங்களுக்குள் புகுந்து சில நாள்களிலேயே தோட்டத்தை நாசம் செய்து விட்டது. 1938, 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் பெரும் பேரழிவை உருவாக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'விஜய்யை நேரில் பார்த்தால் மன்னிப்பு கேட்பேன்' - சேரன் உருக்கம்