சேலம்: சேலம் மத்திய சிறையானது கி.பி. 1862ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இச்சிறைச்சாலை 113.19 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்தச் சிறையில் மொத்தம் 1432 தனி அறைகளைக் உள்ளது. இங்கு 700 கைதிகளை அடைத்து வைக்கும் அளவுக்கு இட வசதி உள்ளது.
மேலும் ஆங்கிலேய அரசு இந்திய விடுதலை போராட்ட வீரர்களை கைது செய்து நீண்ட காலம் சிறைவைக்க இச்சிறைச்சாலையைப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிறையில், சேலம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளையும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சார்ந்த கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில் 5 வார்டன்கள் உள்ளனர். இந்நிலையில் 24 மணி நேரமும் பணிபுரியும் சிறை வார்டன்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் வார்டன்களுக்காக பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: "வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த விளையாட்டு பொருட்கள்”- அறியா வரலாறு கூறும் ஆய்வாளர்..
இந்த பாடலை கடந்த நவ. 6ஆம் தேதி உதவி சிறை அலுவலர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் சீனிவாசன், ஜெயமணி, சங்கீதா ஆகியோர் பாடி ஆடி சிரைவாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வார்டன்களுக்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த பாடலை சேலம் கோரிமேட்டை சேர்ந்த தினகரன் இசையமைத்துள்ளார்.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில், “சிறையில் கைதிகளை பாதுகாத்து கண்காணிப்பது சுலபமான வேலை இல்லை. கைதிகளை நல்வழிக்கு கொண்டு வர சிரமப்படுகிறோம், எப்போதும் பணி நிமித்தமாக உள்ள வார்டன்களுக்கு இந்த பாடலால் புத்துணர்ச்சி ஏற்படும் என நினைத்து இந்த பாடலை எழுதி பாடினோம். தமிழக சிறை துறையில் முதன்முதலாக இது போன்ற பாடலை நாங்களே பாடி வெளியிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்