அமெரிக்காவை சேர்ந்த பால் வீலனுக்கு, ரஷ்யாவின் மாஸ்கோ நீதிமன்றம் உளவு பார்த்த குற்றத்திற்காக 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பாதுகாப்பு பலமான சிறையில் வீலனை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கின்போது வீலன் தனது வாதத்ததில், குற்றமற்றவர் என்றம், குற்றவாளி போல் என்னை சித்தரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார் ஆனால் நீதிபதி, வீலனுக்கு எதிராக ஆதாரங்கள் சரியாக இருப்பதால் அவருக்கு தண்டனை விதித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க தூதரகம் , வீலனின் விசாரணையை நியாயமற்றது என்றும் சரியான ஆதாரமும் வழங்கப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வீலனின் சகோதரர் கூறுகையில், " நீதிமன்றத்தில் சுதந்திரம் இருக்கும் என்று நினைத்தோம் ஆனால் அரசியலாகவே நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இவ்வழக்கு நீதிதுறையில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க அரசு வீலனை வீட்டிற்கு உடனடியாக அழைத்து வர வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.