நாளுக்கு நாள் நாம் நெகிழியை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு நெகிழி பயன்படுத்துவதினால் நமக்கு பல கேடுகள் விளைகின்றன.
இந்த கேடு நம்மை மட்டுமின்றி நம் வருங்கால சந்ததியையும் அதிகமாக பாதிக்கவுள்ளது. ஆனால் தற்போது, நாம் பயன்படுத்தும் நெகிழியால், நம்முடன் இந்த பூவுலகில் பயணிக்கும் உயிரினங்களையும் பாதிக்கிறது.
அந்த வகையில் இத்தாலி நாட்டின் போர்ட்டோ ஷெர்வோ (Porto Cervo) கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தில் வயிற்றில் இருந்து 20 கிலோ நெகிழியை எடுத்துள்ளனர். இதற்கு உலக வன உயிரி அமைப்பு உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.