ETV Bharat / international

Noble Price 2019: வேதியியலுக்கான நோபல் பரிசை தட்டிச்சென்ற 97 வயது பேராசிரியர்! - M. Stanley Whittingham

ஸ்டாக்ஹோம்: 2019 வேதியலுக்கான நோபல் பரிசு 97 வயதான பேராசிரியர் உட்பட மூவருக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளது.

2019 noble for chemistry
author img

By

Published : Oct 9, 2019, 6:48 PM IST

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மைல் கல் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் அல்பிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் இந்தப் பரிசானது, உலகின் மிகவும் மதிக்கத்தக்க பரிசாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, திங்களன்று மருத்துவத் துறைக்கும், நேற்று செய்வாய் கிழமை இயற்பியல் துறைக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று ராயல் ஸ்வீடிஷ் அகாடெமி ஆஃப் சைன்ஸ்' (Royal Swedish Academy of Science) கல்வி நிறுவனத்தில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஜான் பி குட்எனஃப் (John B. Goodenough), எம் ஸ்டான்லே விட்டிங்ஹாம் ( M. Stanley Whittingham) , அகிரா யோஷினோ (Akira Yoshino) ஆகியோருக்கு பகிரிந்தளிக்கப்பட்டது.

இதில், பேராசிரியர் ஜான் பி குட்எனஃப்-க்கு 97 வயதாவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், நோபல் பரிசை வென்ற மிக மூத்த மனிதர் என்ற பெருமையையும் ஜான் பி குட்எனஃப் பெற்றுள்ளார்.

2019 வேதியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள்,  2019 nobel price for chemistry winners
2019 வேதியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள்
லித்தியம் ஐயன் பேட்டரி (Lithium ion Battery) வளர்ச்சியில் இம்மூவர் ஆற்றிய பணிகளைக் கௌரவிக்கவே நோபல் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.

நாம் தினமும் பயன்படுத்தும் செல்போன், மடி கணினி முதல் மின் சக்தியில் இயங்கும் கார் வரை லித்தியம் ஐயன் பேட்டரியில்தான் இயங்குகின்றன.

Noble Price 2019: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்!

2019 வேதியலுக்கான நோபல் பரிசு வென்றவர்களின் பின்புளம்:

ஜான் பி குட்எனஃப்:

1922 ஜூலை 25ஆம் தேதி, ஜெர்மனியின் ஜீனா நகரில் பிறந்த ஜான் பி குட்எனஃப் , அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளைநிலை பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பில் முதுகலை, பிஎச்டி பட்டமும் பெற்றவராவார்.

அதைத் தொடர்ந்து, மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள லிங்கன் ஆய்வுக்கூடத்தில் பணியில் சேர்ந்த குட்எனஃப், தனது ஆய்வுகளின் மூலம் ரான்டம் அக்சஸ் மெமரி ( RAM) வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்.

இதையடுத்து, பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகி, தனது ஆய்வின் மூலம் சத்திவாய்ந்த லித்தியம் ஐாயன் பேட்டரிகளை உருவாக்கினார்.

தற்போது தள்ளாத 97 வயதிலும், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.

எம் ஸ்டான்லீ விட்டிங்ஹாம்:

பிரிட்டன் வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க வேதியியல் ஆய்வாளர் எம் ஸ்டான்லி விட்டிங்ஹாம்.

1941ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த விட்டிங்ஹாம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் நியூ காலேஜில் வேதியியில் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

பின்னர், எக்ஸான் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும், ஸ்லம்பெர்கர் எண்ணெய் நிறுவனத்திலும் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, நியூயார்க்கில் உள்ள பிரிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

சமகால லித்தியம் பேட்டரி வளர்ச்சிக்கு உதவியாக அமைந்த இன்டர்கலேஷன் எலக்டிரோட் கான்ஸெப்டை கண்டுபிடித்தவர் விட்டிங்ஹம் தான்.

அகிரா யோஷினோ:

ஜப்பானைச் சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் அகிரா யோஷினோ.

1948 ஜனவரி 30ஆம் தேதி ஜப்பானின் சவைடா நகரில் பிறந்த அகிரா, ஜப்பானில் உள்ள கையோடோ பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுகலை படிப்பும், ஒசாகா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

தூய்மையான லித்தியத்திற்கு பதிலாக, லித்தியம் ஐயன்களைக் கொண்டு லித்தியம் பேட்டரி உருவாக்கினார். இது பாதுகாப்பான பேட்டரிகளை உருவாக்க உதவியது.

Intro:Body:

Nobel prizes announced for chemistry

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.