லிபியா நாட்டின் தலைநகரான ட்ரைபோலியை ஒட்டியுள்ள கடற்பகுதியில் 130க்கும் மேற்பட்ட மக்கள், ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேற படகில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த அனைவரும் நீரில் முழ்கினர். தகவலறிந்து லிபியாவின் கடற்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு ஐரோப்பிய மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. லிபியா, அதை ஒட்டியுள்ள நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற துயர சம்பவத்திற்கு அரசுகளே காரணம் என, அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதையும் படிங்க: உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் இணையவாசிகள்!