ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் இகோமெனிட்சா துறைமுகத்திலிருந்து கோர்பு தீவை நோக்கி 51 பணியாளர்கள், 239 பயணிகளுடன் யூரோபெரி ஒலிம்பியா என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது. கோர்பு தீவை நெருங்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் கப்பலில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், லைஃப் போட்டுகள் மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே கோர்பு துறைமுகத்திற்கு தகவல்கொடுக்கப்பட்டது. பயணிகள் வெளியேறுவதற்கு முன்னதாகவே கப்பல் மூழ்க தொடங்கியது. இதையடுத்து கடலோர காவல்படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள், கப்பலிலிருந்து 278 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 11 பேர் மாயமாகியுள்ளனர். கப்பலின் உள்ளே இரண்டு பேர் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது என செய்திகள் வெளியிட்டுள்ளன.
கிரீஸ் தென்கிழக்கு ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. இது மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டின் தலைநகரம் ஏதென்ஸ் பல்வேறு வரலாற்று அடையாளங்களை கொண்டுள்ளது. இங்குள்ள சாண்டோரி ரிசார்ட்ஸ் உலகம் முழுவதும் பிரபலமானது.
இதையும் படிங்க: பிரேசிலில் மண் சரிவு - 130 பேர் உயிரிழப்பு