கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் அதிகரித்த கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை, தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, குடிமக்களுக்கான நடமாடும் சுதந்திரத்தை மீண்டும் அளிக்கும் முயற்சியாக நாடுகளின் எல்லைகளை திறக்க முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, பல்கேரியா, சைப்ரஸ், குரோஷியா, ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி, மால்டா, போர்ச்சுகல், ஸ்லோவேனியா ஆகிய 11 ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வீடியோ கால் வாயிலாக கலந்துரையாடினர்.
பின்னர் வெளியிட்ட அறிக்கையில், "குடிமக்களின் சுதந்திரத்தைக் கருத்தில் கொண்டு நாட்டின் எல்லைகள் தற்போது திறக்கப்படவுள்ளன. கரோனா வைரசை பரவாமல் இருப்பதற்கு எல்லைகளை சில கட்டங்களாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து சுகாதாரத்தை பாதுகாப்போம்.
கரோனாவின் பாதிப்பு பல நாடுகளில் வெவ்வேறு விதமாக இருந்தாலும், மக்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்க ஒருங்கிணைப்பதே எங்கள் குறிக்கோள். இந்த எல்லைகளை திறக்கும் ஒப்பந்தத்திற்கு 11 ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இடம் இல்லை... பிரதமரை வெளியேற்றிய உணவகம்