பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், யூசுப் ராசா கிலானி ஆகியோர் மீது ஊழல் புகார் விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
தோஷ்கானா ஊழல் புகாரில் சிக்கி இம்மூவரும் தங்கள் அதிகாரம், பதவியை பயன்படுத்தை வெளிநாடுகளிலிருந்து சொகுசு வாகனங்களை பெற்றதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், வெளிநாட்டு சொகுசு வாகனங்களை 15 விழுக்காடு தொகை மட்டுமே செலுத்தி வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம், மூவரும் ஊழல் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.
உடல் நிலை குறைபாட்டை காரணம் காட்டி லன்டன் சென்ற நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்பாத நிலையில், அவரை விரைவில் பாகிஸ்தான் கொண்டுவர அந்நாட்டு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகளின் நேரில் ஆஜராகச் சொல்லி வழக்கை வரும் 24ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதையும் படிங்க: விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டிய அமெரிக்க நிறுவனம்!