ETV Bharat / international

சீனா அதிபருக்கு மிரட்டல் விடும் பலோசிஸ்தான் விடுதலைப் படையினர்! - ஒன் பெல்ட் ஒன் ரோட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலோசிஸ்தான் பகுதியில் வளர்ச்சி பணியை மேற்கொள்ளக் கூடாது என சீனா, பாகிஸ்தான் அரசுகளுக்கு பலோசிஸ்தான் விடுதலைப் படையினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

baloc
author img

By

Published : May 20, 2019, 9:23 AM IST

'ஒன் பெல்ட் ஒன் ரோட்' என்றழைக்கப்படும் புதிய பட்டுப்பாதையை அமைக்கும் பணியில் சீனா மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. அதற்காக, உலகம் முழுவதிலும் உள்ள 152 நாடுகளின் உள்கட்டமைப்புப் பணிகளை சீனா மேற்கொண்டுவருகிறது.

இந்த பிரம்மாண்ட திட்டத்தின் முக்கிய நாடான பாகிஸ்தானில் பல்வேறு நெடுஞ்சாலை, ரயில் பாதை, துறைமுகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அந்நாட்டிற்கு சீனா பல்லாயிரம் கோடி செலவில் முதலீடு செய்துள்ளது. இதற்கு பாகிஸ்தான்-சீனா பொருளாதார காரிடார் என்று பெயர்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் பலோசிஸ்தானில் சீனா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளுக்கு எதிராக பலோசிஸ்தான் விடுதலைப் படைகள் என்னும் பயங்கரவாத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சமீபத்தில், குவாதர் பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது இந்த அமைப்பினர் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானை மிரட்டும் வகையில் அந்த அமைப்பினர் தற்போது காணொளி ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், " எங்களின் அனுமதியின்றி எதிரிகளின் உதவியோடு இங்கு நுழைந்துள்ள நீங்கள் (சீனா), பாகிஸ்தானின் உதவியுடன் இங்குள்ள கிராமங்களை அழித்து வருகிறீர்கள்,.

பாலோச் பகுதியில் பாகிஸ்தான்-சீனா பொருளாராத காரிடார் திட்டம் படுதோல்வியையும். பலோசிஸ்தானை விட்டு பாகிஸ்தானும், சீனாவும் வெளியேற வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அதிபர் ஜி ஜின்பிங், பலோசிஸ்தானை விட்டு வெளியேர உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்படி நீங்கள் வெளியேறவில்லை என்றால் இம்மண்ணின் பிள்ளைகள் உங்களுக்கு கடுமையாக பதிலடி கொடுப்பார்கள்' எனக் கூறியுள்ளனர்.

இந்த காணொளியில் ராணுவ உடையில் பயங்கர ஆயுதங்களுடன் பலோசிஸ்தான் விடுதலை்ப் படையை சேர்ந்த மஜித் பிரிகேட் வீரர்கள் இருந்தனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.