ETV Bharat / international

சீனாவில் குறைந்த கொரோனா: வூஹானுக்குப் பறந்த ஜின்பிங் - ஜி ஜின்பிங் சீனா அரசு

பெய்ஜிங்: சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வூஹான் மாகாணத்தைப் பார்வையிட்டார்.

XI jingping
XI jingping
author img

By

Published : Mar 10, 2020, 3:21 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா சீனாவைத் தாயகமாகக் கொண்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகணத்தில் மட்டும் இந்நோயால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நோய் தீவிரம் அதிகரித்ததையடுத்து அந்நகரம் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள ஐந்து கோடி மக்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதமாக வாட்டிவதைத்த கொரோனாவின் தாக்கம் தற்போது சீனாவில் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமான பாதிப்புகளே சீனாவில் கண்டறியப்படுகிறது. கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்ததையடுத்து அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ஹூபே மாகணத்தை இன்று பார்வையிட்டார். அங்குள்ள மருத்துவமனைகளுக்குச் சென்ற அவர், நோய் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

விரைவில் வூகான் நகரை பழைய நிலைக்கு கொண்டுவர அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்தார். தற்போதைய நிலவரப்படி, சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மூன்றாயிரத்து 136 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 721 பேர் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: கொரோனாவை தடுக்க இத்தாலியில் புதிய கட்டுப்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.