கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. அந்த வகையில், இலங்கையில் இரண்டு நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
அதில், கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுவரை இலங்கையில் 53 நபர்கள் கரோனா வைரஸ் காரணமாகப் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும், இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் இரண்டு வாரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது’ - பிரதமர் மோடி