ETV Bharat / international

'இது எங்க லிஸ்ட்லயே இல்ல' - ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பு - ஸ்புட்னிக் V

லண்டன் : உலக சுகாதார அமைப்பு முதலீடு செய்துள்ள ஒன்பது நம்பிக்கைக்குரிய கரோனா தடுப்பு மருந்துகளின் சோதனைப் பட்டியலில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

sputnik v
sputnik v
author img

By

Published : Aug 14, 2020, 2:14 PM IST

கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் சில தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளன. இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில், ’ஸ்புட்னிக் V’ என்ற கரோனா தடுப்பு மருந்தை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா சில நாள்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் கரோனா தடுப்பு மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்திருந்தது. ரஷ்யாவின் இந்த கரோனா தடுப்பு மருந்து செய்தி பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும், ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை குறித்து பலரும் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு அச்சம்!

ரஷ்யாவின் இந்த ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், மூத்த ஆலோசகர் டாக்டர் புரூஸ் அய்ல்வர்ட் ஆகியோர் கூறுகையில், "ரஷ்யாவின் இந்தத் தடுப்பு மருந்து குறித்து எங்களுக்கு போதுமான தரவுகள் இல்லை. எனவே, ஸ்புட்னிக் V குறித்து மதிப்பிட முடியாது.

எந்த மாதிரியான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அடுத்தக்கட்ட திட்டம் உள்ளிட்டவை குறித்த கூடுதல் தரவுகளைப் பெற ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், உலகெங்கும் கரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணிகளில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். அதில் நம்பிக்கை அளிக்கும் ஒன்பது தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகளில் உலக சுகாதார அமைப்பும் அதன் கூட்டு நாட்டுகளும் முதலீடு செய்துள்ளன. அவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ள நம்பிக்கைக்குரிய ஒன்பது கரோனா தடுப்புமருந்து ஆராய்ச்சிகளில் ரஷ்யாவின் தடுப்புமருந்து இல்லை என்றும் டாக்டர் புரூஸ் அய்ல்வர்ட் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் தற்போதுவரை இரண்டு கோடியே 10 லட்சத்து 88 ஆயிரத்து 317 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 650 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: "மருத்துவ பரிசோதனைகளை ரஷ்யா முறையாக முடித்திருக்க வாய்ப்பில்லை"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.