ETV Bharat / international

”கரோனா தடுப்பூசி விநியோகத்தில் எந்த நாடும் விடுபடக்கூடாது” - டெட்ரோஸ் அதானோம்

author img

By

Published : Nov 11, 2020, 4:50 PM IST

கரோனா தடுப்பூசி விநியோகத்தில் எந்த நாடும் விடுபட்டுவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

WHO calls for 'fair allocation' after Pfizer's vaccine announcement

ஜெனிவா : கரோனா பாதிப்புக்கு தங்களது தடுப்பூசி 90 விழுக்காடு வரை வேலை செய்வதாக பிஃபிசர், பயோ என்டெக் ஆகிய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் மத்தியில் பேசிய அதன் தலைவர் டெட்ரோஸ், "பிஃபிசர் (Pfizer) தடுப்பூசி தயாரான நிலையில் உள்ளது என்பது நல்ல செய்தி.

அடுத்து வரும் நாள்களில் மேலும் சில தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் முழுமையடையும் என நான் நம்புகிறேன். தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் சமச்சீராக வழங்கப்பட வேண்டும். இதில் எந்த நாடும் விடுபட்டுவிடக் கூடாது என உறுப்பு நாடுகளிடம் நான் வலியுறுத்துகிறேன்" என்றார்.

முன்னதாக திங்கள்கிழமை (நவ.09) மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவது அவசரத் தேவை என்றாலும் அது எல்லாப் பிரச்னைகளையும் சரிசெய்துவிடாது. உலக நாடுகளில், பொது சுகாதாரத்தில் குறைவான முதலீடு போன்ற பிரச்னைகளைக் களைவது முக்கியம். அதேபோல் வறுமை, உணவுப் பற்றாக்குறை, பொருளாதார ஏற்றதாழ்வு, பருவ நிலை மாற்றம் உள்ளிட்டவற்றுக்கும் கவனம் செலுத்த வேண்டும்" எனக் கூறினார்.

பிஃபிசர், பயேஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஐந்து கோடி தடுப்பூசிகளையும், அடுத்த ஆண்டு 130 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மருந்துகளை குளிர்ந்த வெப்ப நிலையில் காக்க வேண்டும் என்பதால் ஆப்பிரிக்கா கண்டத்தில் இதனை விநியோகிப்பதில் பல சவால்கள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவுத் தலைவர் மட்ஷிடிசோ மோய்டி (Matshidiso Moeti) முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவது நல்ல செய்தி என்றாலும் அதனை குளிர் கிடங்களில் சேமித்து விநியோகிக்க தேவையான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உலக நோய்த்தடுப்பு நாள்: தடுப்பூசியை சரியான நேரத்தில் போடுவதன் முக்கியத்துவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.