ETV Bharat / international

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டுக்கு கரோனா! - ஜமைக்கா உசைன் போல்ட்

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Usain Bolt
Usain Bolt
author img

By

Published : Aug 25, 2020, 9:31 AM IST

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒலிம்பிக் போட்டியில் 2008, 2012, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் 100 மீ, 200 மீ ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்றவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப்பின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு, உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 22ஆம் தேதி சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை அவர் தனது ட்விட்டரில் காணொலி வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'நோ தக்ஸ்' - இந்தியாவின் உசைன் போல்ட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.