ஆப்கானிஸ்தான் மேற்கு ஃபரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் படைகளுடன் தாக்குதலில் ஈடுபட்ட 25 தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா வான்வழி தாக்குதலை இரண்டு கட்டமாக நடைத்தியது.
அதனை எதிர் கொண்ட தலிபான் படையினர், குண்டுகளை வீசி பதில் தாக்குதல் நடத்தினர். குண்டு வெடிப்பில் எதிர்பாராத விதமாக ஆப்கனிஸ்தான் நாட்டை சேர்ந்த காவல்துறையினர் 10 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவும் தலிபானகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கையெழுத்தானது.
ஆனால் ஆப்கானிஸ்தான் படைகளை தாக்கிய தலிபான்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஒப்பந்ததிற்கு முன்னாடி அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று மூத்த தலிபான் தளபதிகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்த சீனா: விமானங்களை அனுமதித்த அமெரிக்கா!