ETV Bharat / international

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் - அன்டோனியோ குடரெஸ்

நியூயார்க் : மாற்றுத்திறனாளிகளை சமூக கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

அன்டோனியோ குடரெஸ்
அன்டோனியோ குடரெஸ்
author img

By

Published : Dec 1, 2020, 8:57 AM IST

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் தடைகள், அநீதிகள், பாகுபாடுகளை அகற்றுவதன் மூலம் மட்டுமே அவர்களின் உரிமைகளை முழுமையாகச் செயல்படுத்த முடியும்.

குறைபாடுகள் உள்ளவர்களின் உரிமைகளை உணர்ந்துகொள்வது '2030 நிகழ்ச்சி நிரலின் வாக்குறுதியை நிறைவேற்றுதலின் முக்கிய அம்சமாகும்; யாரையும் புறந்தள்ளக் கூடாது' என்று கருப்பொருளை மையமாகக் கொண்டு நியாயமான, நிலையான உலகத்தை கொண்டுவருவதற்கான உலகளாவிய செயல்திட்டத்தைச் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் எல்லா செயல்களிலும், எங்கள் குறிக்கோள் தெளிவாக உள்ளது. அனைத்து நபர்களும் சம வாய்ப்புகளை அனுபவிக்கவும், பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாசார வாழ்க்கையிலிருந்து உண்மையிலேயே பயனடையவும் அனைவருக்கும் வழங்க வேண்டும். இந்தாண்டு நடைபெற்ற பெரும்பாலான ஐக்கிய நாடுகள் நிகழ்வுகளைப் போலவே, இந்த மாநாடும் காணொலி மூலம் நடைபெறுகிறது.

கரோனா தொற்றுநோய் உலகின் 10 கோடி மாற்றுத்திறனாளிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளது. சாதாரண சூழ்நிலைகளில்கூட, அவர்களுக்கு ஏற்கனவே கல்வி, சுகாதாரம், வேலைகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா? - எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.