ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க தலைமையிலான நாட்டோ படையினரை வெளியேற்றும் நோக்கிலும் தலிபான்-அமெரிக்கா இடையே கடந்த மாதம் 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, வரும் 10ஆம் தேதி (செவ்வாய்கிழமை) ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இந்நிலையில், இன்று உலக பெண்கள் தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டிருந்த ஐநா, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் ஆர்வலர்களையும், மகளிர் அமைப்புகளையும் அமைதிப் பேச்சுவார்த்தையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும் அதில், "அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் படிப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அரசியல் சார்ந்த முடிவுகள் எடுப்பது, நாடாளுமன்றம், அமைதிப் பேச்சுவார்த்தை என அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் தேவை. ஆப்கானிஸ்தான் நலம்பெற வேண்டுமெனில், அந்நாட்டு பெண்களின் நிலை மாறவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாய்ப்பில்ல ராஜா... தலிபான்களுக்கு ஆப்கான் அதிபர் திட்டவட்டம்!