ETV Bharat / international

நவாஸ் ஷெரீப்பை ஒப்படைக்க இங்கிலாந்தை அணுகிய பாகிஸ்தான்! - இம்ரான் அரசு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தப்பி ஓடியவர் என்று அறிவித்துள்ள இம்ரான் அரசு, அவரைப் பிடிக்க இங்கிலாந்து அரசை அணுகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

uk-approached-for-sharifs-extradition-pak-govt-aide

author img

By

Published : Aug 23, 2020, 7:46 PM IST

அல் ஆசியா மில்ஸ் ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நவாஸ் ஷெரீப், உடல் நிலை மோசமானதன் காரணமாக, லண்டனில் சிகிச்சைப் பெறுவதற்காகப் பிணையில் சென்றார். மேலும் லண்டனில் பெற்றுவரும் சிகிச்சை விவரங்களை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு மற்றும் நீதிமன்றத்திடம் தொடர்ந்து, சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே 1986ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சராக நவாஸ் ஷெரீப் இருந்தபோது, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்குப் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நான்கு வார சிகிச்சை பெறுவதற்காக, லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், இன்று வரை பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை. இதனால் இவரை நாட்டைவிட்டு தப்பி ஓடியவர் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உள்துறை ஆலோசகர் ஷாஷாத் அக்பர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''நவாஸ் ஷெரீப்பை தப்பி ஓடியவராகவே பார்க்கிறோம். அவரைப் பிடிப்பதற்காக இங்கிலாந்து அரசையும் அணுகியுள்ளோம். அவர் லண்டன் தெருக்களில் சாதாரணமாக நடமாடுவது நீதித் துறை முகத்தில் அறைவதற்குச் சமம். இதனை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

இதில் எவ்வித தனிப்பட்ட அரசியலும் இல்லை. நாங்கள் சட்டத்தை நிறைவேற்றவே நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். நவாஸ் ஷெரீப் தொடர்பாக தேசிய பொறுப்புணர்வு பணியகத்தில் கோரவுள்ளோம். அவர்கள் 'நவாஸ் ஷெரீப்பை மீண்டும் பாகிஸ்தான் அழைத்து வருவேன்' என உத்தரவாதம் வழங்கிய அவரது சகோதரர் ஷபாஸ் ஷெரீப் வழங்கிய உத்தரவாத பத்திரங்களை ஆராயவுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காட்டுத்தீயால் அல்லல்படும் கலிபோர்னியா... 10 லட்சம் ஏக்கர், 700 வீடுகள் ஒரே வாரத்தில் சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.