சிக்கிம், லடாக்கில் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள இந்தியா-சீனா இடையேயான எல்லைக்கோடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனை தணிக்கும் விதமாக இருநாட்டு உயர்அலுவலர்களும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பிரபல பால் நிறுவனமாக அமுல், பிரதமர் நரேந்திர மோடியின் "சுயசார்ப்பு பாரதம்" அல்லது சுயசார்பு இந்தியாவுக்கான அழைப்பு விடுத்து, சீனப் பொருள்களை புறக்கணிப்போம் என்று எழுச்சி ஊட்டும் விதமாக கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஜூன் மூன்றாம் தேதியன்று அமுல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த பதிவில், “ஒரு சிறுமி டிராகனுடன் (சீனர்களைக் குறிக்கும்) சண்டையிடுவது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், "டிராகனிலிருந்து வெளியேறுங்கள்?" என்று ஒரு தலைப்பைக் கொண்டு, இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள அமுல் “இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” என்று குறிபிட்டிருந்தது.
இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில் இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டதால், அமுல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை முடக்கிய, ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
அதன்பின் அமுலின் ட்விட்டர் பக்கம் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.
இதையும் படிங்க: மேக் இன் இந்தியா முதல் சுயசார்பு இந்தியா வரை - இணையற்ற வளர்ச்சி திட்டங்கள்