கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. குறிப்பாக வைரஸ் பரவலை தடுப்பதற்கு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும், பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதைக் கட்டுப்படுத்த முடியாத ஜப்பான் அரசு, புதிய முயற்சியை கையாண்டு அசத்தியுள்ளது.
ஜப்பானில் சகுரா நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபலமான மலர் விழாவானது, கரோனா அச்சத்தால் இந்தாண்டு நிறுத்தப்பட்டது. விழா இல்லை என்றாலும், பூங்காவில் மக்கள் கூடுவதை தவிர்க்க முடியாததால், சுமார் 10 ஆயிரம் துலிப் மலர்களை ஜப்பான் அரசு பூக்கச்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூன் அல்மீதா - கரோனாவை கண்டுபிடித்த பெண்மணி குறித்து அறிவோம்