ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் போர்ஷே 911 கார் சென்ற காரணத்தினால், அப்போது ரோந்து பணியிலிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கார் ஓட்டுநருடன் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த கனரக வாகனம் ஒன்று, காவலரின் வாகனம் மீதும், போர்ஷே கார் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட பெண் உட்பட நான்கு காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் கிடந்த போர்ஷே காரின் ஓட்டுநர், விபத்தின் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, மயக்கமடைந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். அதில், போர்ஷே கார் ஓட்டுநர் மீது ஏற்கெனவே குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த விபத்து நடைபெறுவதற்கு 50 நிமிடங்கள் முன்புதான், கார் அதிவேகமாக சென்றதாக காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஓட்டுநரை பரிசோதனை செய்ததில் போதை மருத்து எடுத்திருந்தது உறுதியானது.
அப்போது, காவலர்கள் விசாரித்துக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து எதேச்சையாக நடைபெற்றதா அல்லது திட்டமிடப்பட்ட செயலா எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிகொலை