கொழும்புவில் கடந்த 15 ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த பெண்மணியிடம் பாலியல் ரீதியிலான சைகைகள் செய்யதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை சம்பந்தப்பட்ட பெண் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்து நீ்திமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை செய்தி தொடர்பாளர் ரூவான் குணசேகரா, சட்டப்பிரிவு 345 கீழ் கைது செய்யப்பட்டு அளுத்கேட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த நபருக்கு, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிராக இது போன்ற பாலியல் சைகைகள் செய்த நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பெண்ணியவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.