சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. சீனாவில் இதுவரை, கொரோனா தொற்றால் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுபடுத்தும் நோக்கில், பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிகாரி ஒருவர், வடகொரியாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். முன்னதாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்குச் சென்றபோது, அவருடன் பல முக்கிய அதிகாரிகள் அங்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது, அந்த அதிகாரி கொரோனா தொற்றால் பாதிப்படைந்தார்.
கொரோனா தொற்றால் அவர் பாதிப்படைந்தது தெரியவந்ததையடுத்து, அவருக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தபோதிலும், அதனை மீறி பொது இடங்களுக்கு அவர் சென்றுள்ளார்.
இதனிடையே, ராணுவ விதிகளை மீறி நடந்த குற்றத்துக்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: கொரோனா பீதி - இலங்கையில் இலவச விசா திட்டம் 3 மாதங்கள் நீட்டிப்பு