ETV Bharat / international

ஒலிம்பிக் கிராமத்தில் கரோனா பாதிப்பு!

ஒலிம்பிக் போட்டித்தொடர் தொடங்க ஆறு நாள்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Tokyo Olympics
Tokyo Olympics
author img

By

Published : Jul 17, 2021, 1:09 PM IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. 2020ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய இத்தொடர், கரோனா பரவல் காரணமாக ஓராண்டு தள்ளிச்சென்றது.

அதேவேளை, ஜப்பானில் கரோனா அலை ஓயாமல் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு போட்டித் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வீரர்கள், பங்கேற்பாளர்கள் தங்கியிருக்கும் ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதை ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டி உறுதி செய்துள்ளது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் விளையாட்டு வீரர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்றுப் பரவல் அபாயம் காரணமாக போட்டித் தொடர் முழுவதும் முறையான வழிகாட்டு நெறிமுறைகள்படியே நடைபெறும் என்றும், பரிசளிப்பு விழாவில் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இருக்காது என்றும்ம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா... ரசிகர்கள் உற்சாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.