இந்தோனேசியாவின் சுகாபுமி பகுதியில் வசித்து வருபவர் ஜுஜுன் ஜுனேடி (Jujun Junaedi). இவருக்குத் தினமும் சுகாபுமி சாலையில் போக்குவரத்து நெரிசலில், வாகனத்தில் செல்வதற்குப் பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க ஜுனேடி ஹெலிகாப்டரை உருவாக்க முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, இணையத்தில் ஹெலிகாப்டர் செய்முறை காணொலி பார்த்துக்கொண்டே, அதனை உருவாக்க முயன்றுள்ளார். மேலும், அவருடைய இளைய மகனும், பக்கத்து வீட்டுக்காரரும் எட்டு மீட்டர் நீளமுள்ள பெட்ரோல் ஹெலிகாப்டரை உருவாக்க உதவி செய்தனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த ஹெலிகாப்டரை ஜுனேடி 18 மாதங்களுக்கு முன்பு, உருவாக்கத் தொடங்கி தற்போது வெற்றிகரமாக முடித்துள்ளார். விரைவில் தனது முதல் பயணத்தை ஹெலிகாப்டரில் பறக்க இருக்கிறார். இந்த முயற்சியில் ஹெலிகாப்டருக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ரூ. 1.52 லட்சம் செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "எங்கள் சைக்கிளை ரிப்பேர் செய்து தரலை" போலீசில் புகார் 10 வயது சிறுவன் புகார்..!