தென்சீனக் கடல் மற்றும் நாட்டின் சிலப் பகுதிகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிய நாட்டின் பிராந்திய கடற்படைகளை சக்தி மிகுந்ததாக மாற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் எண்ணினார். இதையடுத்து, கடந்த ஆண்டு ஷான்டோங் ஆணையத்தை அமைத்து சக்தி வாய்ந்த விமானம் தாங்கிய கப்பல்கள் உருவாக்கும் பணி நடைபெற்றது.
சோவியத் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட லியானோனிங் என்ற விமானம் தாங்கி கப்பலை முன்னதாக தாயரித்த சீனா தற்போது ஷான்டோங் என்ற விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்துள்ளது.
இந்த விமானங்கள் முன்னதாக மே மாதத்தில், ஆயுதங்களையும் உபகரணங்களையும் சோதிக்கவும், பணியாளர்களின் பயிற்சியை மேம்படுத்தவும் சோதனைகளை மேற்கொண்டது. தற்போது உருவாக்கப்பட்டுவரும் ஷான்டோங் இன்னும் 22 நாள்களில் ராணுவப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.