ETV Bharat / international

தாய்லாந்து அரசரை திருமணம் செய்துகொண்ட பாதுகாவலர்! - 3 days

பாங்காக்: தாய்லாந்தின் அரசர் மஹா வஜிரலோங்கோன் தனது தனிப்பட்ட பாதுகாவலரை திருமணம் செய்துகொண்டதோடு, ராணி பட்டத்தையும் அவருக்கு வழங்கியுள்ளது நாட்டு மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசரை திருமணம் செய்து கொண்ட பாதுகாவலர்
author img

By

Published : May 2, 2019, 11:19 AM IST

தாய்லாந்து அரசராக இருந்த பூமிபோன் அடூன்யடேட், கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் உயிரிழந்தார். உலக வரலாற்றில் நீண்ட காலம் அரசராக பதவி வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. அவரது மறைவுக்கு பிறகு அரசராக அவரது மகன் மஹா வஜிரலோங்கோன் பொறுப்பெற்று கொண்டார். எனினும், பல்வேறு காரணங்களால் அவரது முடிசூட்டு விழா தள்ளிபோனது.

இந்நிலையில் மே 4ஆம் தேதி அவரது முடிசூட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தனது பாதுகாவலர்கள் குழுவில் அதிகாரியான சுதிதா என்ற பெண்னனை அரசர் மஹா வஜிரலோஹ்கோன் இன்று திருமணம் செய்துகொண்டார்.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் இந்த திருமண நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. இதில், இருவரும் திருமண ஆவணங்களில் கையெழுத்திட்டனர். இந்த திடீர் திருமணம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுதிதாவை கடந்த 2014ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்கள் குழுவில் அதிகாரியாக மஹா வஜிரலோங்கோன் சேர்த்தார். இதனையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசர் மஹா வஜிரலோங்கோனின் நான்காவது மனைவி சுதிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.