பாங்காக்: தாய்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற பீட்சா நிறுவனம் ஒன்றில், அண்மைகாலமாக விற்பனை மந்தமாக நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் கிரேஸி ஹேப்பி பிட்சா என்னும் புதிய சுவை கொண்ட பீட்சாவை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தினர் கூறுகையில், கிரேஸி ஹேப்பி பிட்சா விற்பனையானது புதிய சந்தைப்படுத்தல் யுக்தி மட்டுமே.
இந்த பீட்சாவில், கஞ்சா இலைகள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டதாக இருக்கும். வறுத்த மூன்று கஞ்சா இலைகள் இதன் மீது தூவப்பட்டு இருக்கும். ஒரு பீட்சாவின் விலை ரூ. 1,123க்கு விற்க திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக மூன்று கஞ்சா இலைகளுக்கு ரூ. 225 வசூலிக்கபடும்.
இதை சாப்பிட்டால், தூக்கமும், மயக்க உணர்வும் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் கஞ்சா விற்பனை சட்டவிரோதமானது. சொந்த நுகர்வுக்காக குறைந்த அளவு கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிறுவனமும் விதிமுறைகளை பின்பற்றி குறைந்தளவு கஞ்சா பயன்படுத்த உள்ளது.
இதையும் படிங்க: பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா... சிக்கியது எப்படி...