ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்துவருகிறது. இருவருக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தாலும், அவ்வப்போது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக்கொள்கின்றனர்.
அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள், துப்பாக்கிச் சூடு தாக்குதல் போன்றவற்றில் குறைந்தது 305 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 20 விழுக்காடு உயிரிழப்பு எண்ணிக்கையும், காயமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான தாக்குதல்கள் காபூல், நங்கர்ஹார், காந்தஹார், ஹெல்மண்ட், பால்க், கஸ்னி மாகாணங்களில் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழப்பு