காபூல்(ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்கா படைகள் முழுவதுமாக திரும்பப்பெறப்படும் என அந்நாட்டு அதிபர் அறவித்தார். அதன்படி, தற்போது வரை 95 விழுக்காட்டிற்கும் அதிகமான அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.
அவ்வாறு, மாலிஸ்டன் மாவட்டத்தை கைப்பற்றிய தலிபான்கள், அங்கிருந்த 43 அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளனர். இதேபோல், மற்ற பகுதிகளிலும் அப்பாவி மக்களை தலிபான்கள் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலிஸ்டன் மாவட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் யாரும் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களோ, அல்லது அரசாங்க ஊழியர்களோ அல்ல. அவர்கள் அப்பாவி பொதுமக்கள்" என மனித உரிமைச் செயற்பாட்டாளர் மினா நாடேரி தெரிவித்துள்ளார்.
மாலிஸ்தான் மாவட்டத்திற்குள் தலிபான்கள் நுழைந்ததில் இருந்து பல்வேறு மனித உரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தலிபான்கள் நகரங்களைக் கைப்பற்றுவதைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்!