ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்காவுக்குச் சொந்தமானது - தலிபான்

காபூல்: அமெரிக்கப் படை விமானம் ஒன்று கிழக்கு ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கியதாக தலிபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

plane crash, விமான விபத்து, அமெரிக்கப் படை விமான விபத்து
plane crash
author img

By

Published : Jan 27, 2020, 11:12 PM IST

Updated : Jan 28, 2020, 10:16 AM IST

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் உள்ள தாஹ் யாக் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியான நிலையில், அவ்விமானம் அமெரிக்கப் படையைச் சேர்ந்தது என தலிபான் செய்தித்தொடர்பாளர் தற்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க ராணுவத்திடம் கேட்டபொழுது அவர்கள் பதிலளிக்கவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பரவிவரும் காணொலி ஒன்றில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பொம்பார்டியர் இ-11 ஏ விமானம் துண்டுதுண்டாகச் சிதறிக்கிடப்பதைக் காணமுடிகிறது.

சம்பவ இடத்தில் விமானம் ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தாகவும், இரண்டு உடல்களை தான் கண்டதாகவும் தாரிக் கஸ்நிவால் என்ற செய்தியாளர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிறுமி வயிற்றில் முடி, ஷாம்பு பாக்கெட்! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

Intro:Body:Conclusion:
Last Updated : Jan 28, 2020, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.