ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாணகாணத்தில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு காவலர் ஒருவர் உதவியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் அமெரிக்கா, நாடோ படைகளை குறிவைத்து தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலிலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
நீண்டுக்கொண்டே செல்லும் இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவும், தலிபானும் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றன. பேச்சுவார்த்தையின் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படுமேயானால், ஆப்கானிஸ்தானில் பணியமர்த்தப்பட்டுள்ள 13 ஆயிரம் அமெரிக்கப் படையினர் நாடு திரும்புவர்.
இதையும் படிங்க : '9ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த பெண் உயிர் தப்பிய அதிசயம்' - வைரல் வீடியோ