ETV Bharat / international

பிலிப்பைன்ஸைத் தாக்கிய பலத்த சூறாவளி - காணொலி!

author img

By

Published : May 14, 2020, 5:10 PM IST

மணிலா: கரோனா அச்சத்திலிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை, சக்தி வாய்ந்த வோங்பாங் சூறாவளி தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sd
dsdsd

பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய சக்தி வாய்ந்த வோங்பாங் சூறாவளி, பசிபிக் பகுதியில் உருவானதால் விரைவாக வலுப்பெற்றது. இதையடுத்து, கிழக்கு சமர் மாகாணத்தின் சான் பாலிகார்பியோ கடற்கரையில் கரையைக் கடந்தது. இந்தச் சூறாவளி மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் தன்மை கொண்டது.

இந்தச் சூறாவளியின் தாக்கத்தால் கடுமையான மழையும், தென்னை மரங்கள் காற்றில் சாய்வது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. ஆனால், புயல் தாக்கிய தருணத்தில், ஏற்கெனவே கரோனா அச்சத்தால் 10 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்ததால் பாதிப்பு ஏதும் பெரிதாக ஏற்படவில்லை.

பிலிப்பைன்ஸைத் தாக்கிய பலத்த சூறாவளி

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி சூறாவளி தாக்குவதும், எரிமலை வெடிப்பதும் போன்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையானது தான். அத்தருணங்களில் மக்கள் அவசர கால முகாம்களில் தங்க வைக்கப்படுவர். இந்த ஆண்டில் நாட்டைத் தாக்கிய முதல் சூறாவளி வோங்பாங் சூறாவளி" என்றார்.

இதுவரை பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 772ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா ஆய்வுகளை ஹேக்செய்யும் சீனா - அமெரிக்கா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.