இந்தோனேஷியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் தலைநகர் டிமாடியிலிருந்து தென்கிழக்கு பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.
இதனால், பீதியடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு சாலையில் தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானது என்றும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் அந்நாட்டுப் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம், கிழக்கு இந்தோனேஷியாவில் 6.9 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.