இலங்கையில் நேற்று நான்கு தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் இதுவரை 290 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு வெடிகுண்டு இன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் குறைந்த வெடி திறனுடைய 87 வெடி பொருட்கள், தற்போது கொழும்பு புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.