ETV Bharat / international

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு; பிரபல வர்த்தகர் கைது

கொழும்பு: இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இப்ராஹிம் ஹாஜியார் என்ற அந்நாட்டின் முன்னணி வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது மகன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

srilanka
author img

By

Published : Apr 22, 2019, 9:15 AM IST

Updated : Apr 22, 2019, 9:29 AM IST

இலங்கையில் நான்கு தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 290 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்பதால் அங்கு பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இன்று கொழும்பு விமானநிலையத்தில் ஒன்பதாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாடு பீதியில் உறைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் முன்னணி வர்த்தகரான இப்ராஹிம் ஹாஜியார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது மகன் தலைமறைவாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 13 பேர் நேற்று மாலை வரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவன் குணசேகரா தெரிவித்தார். அதுமட்டுமின்றி இவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் இருந்து இஸ்லாமிய ஆண் ஒருவரின் தலை, உடல் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயத்திலிருந்தும் ஆண் ஒருவரின் தலைப்பகுதி மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

இதேபோல், குண்டு வெடிப்பு நடைபெற்ற மட்டக்களப்பு தேவாலயத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உடல் சிதைவடைந்த நிலையில் தலைப்பகுதியுடன் இஸ்லாமிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது எனவே இந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.

Intro:Body:

🅱NEWS babutvl                பிரபல முஸ்லிம் வர்த்தகர் கைது; அவரது மகன் தலைமறைவு!

➖➖➖➖➖💥இலங்கை செய்தியளார் வானகன்💥

➖➖➖➖➖இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து, தீவிர புலன் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இப்ராஹிம் ஹாஜியார் என்ற இலங்கையின் முன்னணி வர்த்தகரே கைதாகியுள்ளார். தொடர் குண்டு வெடிப்புக்களுக்கும் அவரது புதல்வர்களுக்கும் தொடர்பிருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.

தற்போது அவரது புதல்வர்கள் தலைமறைவாகிவிட்டனர் எனப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

➖➖➖➖➖➖➖               🅱NEWS      babutvl      தாக்குதலாளிகள் மூவரின் தலைகள் மீட்பு; கைதானோரிடம் தீவிர விசாரணை

➖➖➖➖➖💥இலங்கை செய்தியளார் வானகன்        

💥💥💥💥💥உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 13 பேர் நேற்று மாலை வரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, சம்பவங்கள் இடம்பெற்ற மூன்று இடங்களிலிருந்து 3 ஆண்களின் தலைகளும் மீட்கப்பட்டுள்ளன எனவும், இவை தற்கொலைத் தாக்குதலுக்கான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் கூறினார்.

கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் இருந்து முஸ்லிம் ஆண் ஒருவரின் தலை உடல் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியார் தேவாலயத்திலிருந்து ஆண் ஒருவரின் தலைப்பகுதி மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இவர் முஸ்லிம் எனக் கூறப்படுகின்றது. இரண்டு இடங்களில் மீட்கப்பட்ட தலைகள் குறித்து விசாரணை நடத்தும் பொலிஸார், அந்தத் தலைகள் தற்கொலைக் குண்டுதாரிகளான ஸஹ்ரான் ஹாசிம் மற்றும் அபு மொஹம்மத் ஆகஇருக்கலாம் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உடல் சிதைவடைந்த நிலையில் தலைப்பகுதியுடன் முஸ்லிம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நடந்த தாக்குதல்களில் அனேகமானவை தற்கொலை குண்டுதாரிகளாலேயே நடத்தப்பட்டுள்ளன எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஒ ரு இஸ்லாமிய தீவிரவாதக் குழு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆறு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என்று புலன் விசாரணையாளர்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் சர்வதேச ரீதியில் தகுந்த தரப்பிடம் உயர் பயிற்சிபெற்றவர்கள் என்றும் தாக்குதலின் விளைவு உச்சமாக இருப்பதற்காக உடலின் முன், பின் பக்கங்கள் இரண்டிலுமோ வெடி மருந்துகளை அவர்கள் கட்டி இருந்தனர் என்றும் நேற்றிரவு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடயங்கள் குறித்து விளக்கமளித்த பிரதமர் தெரிவித்தார் என அறியவந்தது.

இத்தகைய தாக்குதல் ஒன்று நடைபெறும் என கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி இந்தியத் தரப்பு இலங்கைக்கு எச்சரித்திருந்தது என்றும் – அது குறித்து இலங்கையின் பாதுகாப்பு உயர் வட்டாரங்களுக்கு எச்சரிக்கப் பட்டது என்றும் – இந்த எச்சரிக்கை குறித்து அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவு தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்திருந் தது என்றும் – இந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை தாங்களும் நன்கு அறிந்திருந்தனர் என அமைச்சர்கள் ஹக்கீமும் மனோ கணேசனும் தெரிவித்த போதிலும், தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என பிரதமர் கூறியிருந்தார் என்றும் – கொழும்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

Conclusion:
Last Updated : Apr 22, 2019, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.