இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் தேவாலயங்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பின் எதிரொலியாக, இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகள் இஸ்லாமியப் பெண்களின் உடையான பர்தாவைக் காவல் கண்காணிப்பிலிருந்து தப்பிப்பது, வெடிகுண்டுகளை மறைத்து எடுத்துச் செல்வது உள்ளிட்ட நாசகார வேலைகளுக்குப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.