ETV Bharat / international

பிரதமராக பதவியேற்கவுள்ள மகிந்த ராஜபக்ச! - மகிந்த ராஜபக்ச

கொழும்பு: இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நாளை (ஆகஸ்ட் 8) பதவியேற்கவுள்ளார்.

மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச
author img

By

Published : Aug 8, 2020, 7:02 PM IST

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில், மொத்தமுள்ள 225 தொகுதிகளில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 தொகுதிகளைக் கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்ததன் மூலம் இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நான்காவது முறையாக நாளை (ஆகஸ்ட் 8) பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு நிகழ்ச்சி வடக்கு கொழும்புவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் கோயிலில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 10ஆம் தேதி, அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ஆகியோர் பதவியேற்கவுள்ளனர். ராஜபக்சவின் கட்சி 22 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்திலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், பெரும்பான்மை சிங்கள சமூகம் ஆதிக்கம் செலுத்தும் தெற்கு பகுதிகளில் ராஜபக்ச கட்சிக்கு வாக்குகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் ராஜபக்ச கட்சி 60 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 59.9 விழுக்காடாகும். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சகோதர் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: உலகளவில் 2 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.