ETV Bharat / international

இலங்கை எப்போதும் வெளிப்பாதுகாப்புக்கு இந்தியாவை நம்பியுள்ளது: வல்லுனர்

author img

By

Published : Aug 27, 2020, 3:42 PM IST

இந்தியா-இலங்கை உறவு, இலங்கையின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை குறித்து வெளியுறவுத்துறை நிபுணர் சத்தியமூர்த்தி மூத்த செய்தியாளர் அரோனிம் பூயானுக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம்.

SL
SL

கொழும்பு எப்போதும் “முதலில் இந்தியா” என்ற வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் என்று, இலங்கையின் புதிய வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் வலியுறுத்தி இருக்கும் சூழலில், இலங்கைத்தீவு அதன் வெளிப்பாதுகாப்புக்கு எப்போதும் புதுடெல்லியை சார்ந்து இருப்பதால் இது ஆச்சரியம் தரவில்லை என்று, இந்தியா - இலங்கை உறவுகளை நெருக்கமாக கண்காணித்து வரும் முன்னணி நிபுணர் கூறியுள்ளார்.

வெளியுறவுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டதும், இம்மாத தொடக்கத்தில் ஒரு உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை நடுநிலை வெளியுறவுக் கொள்கையை தொடர விரும்புகிறது, ஆனால் உத்திகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் அது "முதலில் இந்தியா" என்ற கொள்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று, கொலம்பேஜ் கூறினார்.

"அதிபரின் (இலங்கை அதிபர் கோத்தபய மஹாப்ச) மூலோபாய பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாங்கள் "முதலில் இந்தியா" என்ற கொள்கையை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்."

இந்தியாவுக்கு ஒரு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக நாங்கள் இருக்க முடியாது; நாங்கள் இருக்க வேண்டியதும் இல்லை. நாங்கள் இந்தியாவிடம் இருந்து பலனடைய வேண்டும். பாதுகாப்பைப் பொருத்தவரை நீங்கள்தான் எங்களது முதல் முன்னுரிமை என்று ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார், ஆனால் பொருளாதார வளத்திற்காக மற்றவர்களுடன் இணைந்து சமாளிக்க வேண்டும்”.

நடுநிலை வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதோடு, இந்தியாவின் மூலோபாய நலன்களையும் இலங்கை பாதுகாக்கும் எனவும் கொலம்பேஜ் மேலும் தெரிவித்தார்.

அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் புகழ்பெற்ற சக சிந்தனையாளரும், அதன் சென்னை பிரிவின் தலைவருமான என். சத்தியமூர்த்தி, ஈடிவி பாரத்-திடம் கூறுகையில், கொலம்பேஜின் அறிக்கை ஆச்சரியமானதல்ல. ஆனால் இதில் புதியது என்னவென்றால், அந்த அறிக்கை மிக விரிவாக உள்ளது என்றார்.
"கொலம்பேஜ் மீண்டும் வலியுறுத்தி (இலங்கையின் ‘முதலில் இந்தியா’ கொள்கை) இருக்கிறார்; ஆனால் இதுபோன்ற ஒரு விரிவான அறிக்கை முதல்முறையாக இப்போதுதான் வந்துள்ளது,” என்று மூர்த்தி கூறினார். "அவர் மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்" என்றார்.

இலங்கை மற்றும் மற்றொரு இந்தியப்பெருங்கடல் நாடான மாலத்தீவு இரண்டும் “முதலில் இந்தியா” என்ற வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகின்றன; ஏனெனில் அவற்றுக்கு பாதுகாப்பு கவலைகள் உள்ளதாக அவர் கூறினார்.

"இரு நாடுகளும் தனிப்பட்ட தீவு நாடுகளாக உள்ள சூழலில் வெளிப்பாதுகாப்பை தனியாக கையாள முடியாது என்பதை அறிவார்கள். தங்களைச் சுற்றியுள்ள நீர் பிராந்திய பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிவார்கள்,”என்று மூர்த்தி சுட்டிக்காட்டினார்.

இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற அட்மிரலான கொலம்பேஜ், அந்நாட்டின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்ட முதலாவது ராணுவத்துறை நபர் என்றும், எனவே பாதுகாப்பு நலன்களுக்கு முன்னுரிமை இருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைப்பது தவறு என்றும், இதை சரிசெய்ய தற்போது முயற்சிகள் நடந்து வருவதாகவும் கொலம்பேஜ் கூறினார்.

கடல் துறைமுகத்தின் முதல் கட்டம் நவம்பர் 2010ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. திட்டத்தின் முதல் கட்டத்தின் மொத்த கட்டுமானச்செலவு 361 மில்லியன் டாலர்கள், இதில் 85 சதவீதம் சீனாவின் எக்ஸிம் வங்கியால் நிதி உதவி செய்யப்பட்டது.
எனினும், 2016 ஆம் ஆண்டில் துறைமுகம் 11.81 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது, மற்றும் 10 மில்லியன் டாலர் நேரடிச்செலவாகும்; ஆனால் நிர்வாகச் செலவினங்கள் இயக்க லாபமாக வெறும் 1.81 மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டது.

துறைமுகம் பெரும் இழப்புகளைச் சந்தித்ததால், கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமானது, இதனால் கடனுக்கான பங்கு பரிமாற்றத்திற்காக 2016 ஆம் ஆண்டில் துறைமுகத்தின் 80 சதவீதத்தை, சீன மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனிக்கு (CMPort) குத்தகைக்கு விடும் யோசனை முன்மொழியப்பட்டது, அந்த நிறுவனம், 1.12 பில்லியன் டாலர் முதலீடு செய்து பொது - தனியார் பங்களிப்பின் கீழ் துறைமுகத்தை புதுப்பிக்கும்.

பின்னர், ஜூலை 2017ஆம் ஆண்டில் இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) மற்றும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் ஆகியன, துறைமுகத்தை சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. துறைமுகத்தின் உரிமையை இலங்கை அரசு வைத்துக் கொண்டு, 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டது. இந்த ஒப்பந்தம் இலங்கை அரசுக்கு 1.4 பில்லியன் டாலரை கொடுத்தது, அவர்கள் அதை சீனாவின் கடனை அடைக்கப் பயன்படுத்துவார்கள்.

துறைமுகம் குத்தகை விடப்பட்டதால் கொழும்பு, புதுடெல்லியில் பக்கம் இருந்து பெய்ஜிங்கை நோக்கி சாய்ந்ததாக, நோக்கர்கள் கருதினர். அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவுத்திட்டமான பட்டி (நிலம்) மற்றும் பாதை (கடல்) முன்முயற்சியின் கீழ் இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்க முற்படுவதாக, பல்வேறு சர்வதேச நாடுகளால் சீனா விமர்சிக்கப்பட்டுள்ளது.

எப்படியானாலும் மக்களின் கருத்துக்கு மாறாக, இலங்கை ஒருபோதும் சீனாவை நோக்கி சாய்ந்ததில்லை என்றும், முதலில் துறைமுகத்தை புதுடில்லிக்கு கொழும்பு வழங்கியதாகவும் மூர்த்தி தெரிவித்த்தார். ஆனால், 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமும், வளர்ச்சியடையாத மீன்பிடி கிராமமுமான அம்பாந்தோட்டையில் மிக அதிக மற்றும் பெரியளவில் துறைமுக கட்டுமான திட்டத்திற்கு நிதி அளிக்க இந்தியா அதிக அக்கறை காட்டவில்லை.

அதன்பிறகு துறைமுகத் திட்டத்தில் ஒரு பயனீட்டாளராக சீனா நுழைந்தது என்பது, மூர்த்தியின் கருத்தாகும். "இலங்கையில் சீனா முதலீடுகள் செய்வதில் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை," என்று அவர் கூறினார். "புதுடெல்லி தனது சொந்த பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது" என்றார்.

இச்சூழலில், இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை செயல்படாது என்று அதிபர் கோத்தபய, பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாக மூர்த்தி கூறினார்.

இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளியாக இந்தியா தொடர்கிறது மற்றும் புதுடெல்லியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் இரு நாடுகளும் நெருக்கமான உறவுகளை அனுபவிக்கின்றன.

இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் பெருகிவரும் போலி சானிடைசர் வர்த்தகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.